Advertisement

NRIஆல்பம்

25 Nov 2023

மூன்று வயது சிறுவன் பா. இனியவேல், ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரில் கார்னிவல் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இந்திய தலைவர்கள் மாதிரி வேடம் அணிந்து அவர்களைப்போன்று பேசி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் 0

21 Sep 2023

பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை கிரிஞி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது 0

21 Aug 2023

வடஜெர்மனியின் பிரேமன் நகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஆண்டு மஹோத்சவ விஞ்ஞாபனத்தின் பத்தாம்நாள் ஐநூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் தேர் இழுத்து, அக்னிச்சட்டி, பாற்குடம் எடுத்து விநாயகரை வழிபட்டனர். ( படம்: தினமலர் வாசகர் பாலகிருஷ்ணன்) 0

30 Jun 2023

வடஜெர்மனியில் உள்ள பிறேமன் நகரில் வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ஐந்து நாட்கள் யாக சாலை பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் ஐந்நூறு பேர் கலந்து கொண்டு விநாயகர் அருளை பெற்றனர் . (படம்- தினமலர் வாசகர் பாலகிருஷ்ணன்) 0

15 Jun 2023

ஜெர்மனி வுப்பர்டல் நகரில் அமைந்துள்ள தனித்துவமான மோனோரயில். இது ஒரு தொங்கும் இரயில். பெரிய எஃகு தூண்களால் கட்டப்பட்ட தண்டவாளங்களுக்குக் கீழே இந்த இரயில்கள் பற்சக்கரங்களால் பற்றிக்கொண்டு தலைகீழாக தொங்கியவண்ணம் செல்கின்றன 0

10 Mar 2023

கோயம்புத்தூரை சேர்ந்த 11 வயதான ஷாஜெய்ப், 'ஜெர்மனி செஸ் கூட்டமைப்பு' நடத்திய 5 கட்ட செஸ் போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து ஜெர்மனியின் தற்போதைய கிராண்ட் மாஸ்டர் டேனியல் ஃபிரீட்மன் கையால் சான்றிதழும் 300 யூரோ பணமும் வென்றுள்ளார் 0

28 Jan 2023

ஸ்வீடன் நாட்டின் தென்கோடியில் உள்ள மால்மோ, லுண்ட் மற்றும் அருகிலுள்ள பிற நகர வாழ் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றிணைந்து தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கம் சார்பாக ஏழாம் ஆண்டு பொங்கல் விழாவினை தமிழர் கலாச்சார முறைப்படி பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் கொண்டாடினர் 0

20 Dec 2022

பிரான்சுத் தமிழ்ச் சங்கத் தலைவர்: தசரதன், துணைத்தலைவர்: தளிஞ்சன் முருகையா, பொதுச்செயலாளர்: கோகுலன் கருணாகரன், பொருளாளர்: மொழிச்செல்வன், துணைச் செயலாளர்: தெய்வ வரதராசன், துணைப் பொருளாளர்: எலிசபெத் அமல்ராஜ் 0

14 Dec 2022

இலண்டனில்தாட்டன்ஹீத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திகணபதி கோயிலில் ச.பொன்ராஜ் எழுதிய சதுரகிரி பயணமும் சித்தர்களின் நினைவுகளும் மற்றும் தாமிரவருணி கரையினிலே… சிவதரிசனம் என்ற இரண்டு நூல்களை கோயில் நிர்வாக அறங்காவலர் கனகரத்தினம் பரமநாதன் வெளியிட்டார் 0

20 Nov 2022

ஜெர்மனியில், கொலோன் நகரின் ரைன் தமிழ் குழுமம் தீபாவளி திருவிழாவை சிறப்பாக கொண்டாடியது. குழுமத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்ற, புத்தாடை, இனிப்புகள், பட்டிமன்றம் , கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைவருக்குமான வினா விடை விளையாட்டு நடந்தது. 0
 
Advertisement