Advertisement

NRIஆல்பம்

27 Nov 2023

ஆக்லாந்து நகர மைய பகுதியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் கிறிஸ்துமஸ் தாத்தா மிட்டாய்களை குழந்தைகள் முதல்அனைவருக்கும் வழங்க, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித விதமாக அலங்கரித்துக் கொண்டு சென்றனர் 0

13 Nov 2023

சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்திய இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வில் இலக்கியத்தில் அறிவாற்றல், இலக்கியத்தில் மேலாண்மை, இலக்கியத்தில் உணர்ச்சி ஆகிய தலைப்புகளில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகி. சிவம், பர்வீன் சுல்தானா பேசினர் 0

19 Sep 2023

தெற்கு ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் வானொலியாகிய வாகை வானொலியின் புதிய நிலையத்தை, வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது அடிலெய்டு நகரில் திறந்து வைத்தார். (படம்: தினமர் வாசகர் கண்ணன்) 0

19 Sep 2023

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. அடிலெய்டு விநாயகர் கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து விநாயகர் அருளை பெற்றனர். ( படம்)- தினமலர் வாசகர் கண்ணன் 0

14 Sep 2023

பிரிஸ்பேன், லலிதகலாலயா நாட்டியப்பள்ளி மாணவ-மாணவியர்களின் சலங்கை பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடனங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ‘பொம்ம பொம்மதா தைய தைய’ பாடலுக்கு, பின்னல் கோலாட்டம் ஆடிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது 0

13 Sep 2023

பிரிஸ்பேனின் நடனாஞ்சலி பள்ளியின் ‘நாட்டிய லயம்’ நிகழ்ச்சி, ஃபாரஸ்ட்லேக் பகுதியிலுள்ள புனித ஜான் ஆங்கிலிகன் பள்ளி கலையரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. சுமார் 20க்கும் மேற்பட்ட நடனங்கள் இடம்பெற்றன 0

26 Jul 2023

பிரிஸ்பேனை அடுத்த பொற்கரை பகுதியில், இந்து கலாச்சார கழகத்தால் கட்டப்பட்டு வருகிற கோவில் மற்றும் கலாச்சார வளாகத்தில் ஆடித்திருவிழா அன்று பெண்கள் கும்மியிட்டும், குலவையிட்டும் கொண்டாடினர். மாரியம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது 0

12 Apr 2023

ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஹெலன்ஸ்பர்க் எனும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் ஏப்ரல் 10 ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர் 0

10 Apr 2023

ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பேரா ஸ்ரீ விஷ்ணு சிவா மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை சுரேஷ் முத்துபட்டர் மற்றும் சுவாமி ஜீவன் குருக்கள் உட்பட பல சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டுமிகவும் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்கள். 0

08 Apr 2023

வளர்ந்துவரும் இளம்கலைஞர்களின் இந்த ஆண்டிற்கான படைப்பு, கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 1, 2023) பிரிஸ்பேன் ஆகாசியா ரிட்ஜ் பள்ளிக் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது 0
 
Advertisement