Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

09 Dec 2022

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். 0

08 Dec 2022

சென்னை, பிரம கான சபாவின் டிசம்பர் கலை விழாவைத் துவக்கி வைத்து, கவர்னர் ரவி, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார், இடமிருந்துவலம்: சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி, விருதாளர்களான , நாதஸ்வர இசைக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, கர்நாடக இசை பாடகி சவுமியா, பரதநாட்டிய கலைஞர் கிருஷ்ணகுமாரி நரேந்திரன், மேடைக் கலைஞர் சந்திரசேகரன் ஆகியோர்.இடம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர் 0

08 Dec 2022

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 0

08 Dec 2022

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரையில் இரவு நேரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இடம் : காந்தி சிலை அருகே. 0

08 Dec 2022

மாண்டாஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில், அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. 0

08 Dec 2022

குஜராத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து தமிழக பா.ஜ., சார்பில் சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 0

08 Dec 2022

மாண்டாஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் முகத்துவாரம் வழியாக அடையாறு ஆற்றில் மீன் பிடிக்க படகில் செல்லும் மீனவர்கள்.இடம்: சீனிவாசபுரம், சென்னை. 0

08 Dec 2022

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி-வடிவுடையம்மன் கோவிலில் மூலவர் ஆதிபுரிஸ்வரர் தங்க நாக கவசம்இன்றி தரிசிக்க குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம். 0

08 Dec 2022

புதுடில்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு பதக்கங்கள் வென்ற கோவையை சேர்ந்த வீரர் வீராங்கனைகள். இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன். 0

08 Dec 2022

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புறவழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம், தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தினார். 0

08 Dec 2022

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து வழங்கும் பதில் சொல்; அமெரிக்கா செல் வினாடி - வினா போட்டி கோவை செட்டிபாளையம் ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது, இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன் பள்ளி அறிவியல் ஆசிரியர் சுகந்தா, முதல்வர் புவனேஸ்வரி, தமிழ் ஆசிரியர் மனோன்மணி, அறிவியல் ஆசிரியர் பிரகாஷ் உள்ளிட்டோர். 0

08 Dec 2022

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் அருகே புதிய பாலம் கட்டடத்திற்கு குழாய் உடைந்து வீணான தண்ணீரை பொக்லைன் மூலம் ஊற்றினர். 0

08 Dec 2022

மாண்டஸ் புயல் வருவதற்கு முன்பாக புதுச்சேரி வங்கக் கடலில் கொந்தளிப்பாக காட்சியளித்தது. 0

08 Dec 2022

சென்னையில் பெய்த சாரல் மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம் : டைடல் பார்க், திருவான்மியூர். 0

08 Dec 2022

தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ரூ 22.20 கோடி மதிப்பிலான முடிவு பெற்ற 57 திட்டங்களை திறந்து வைத்தார். மேலும் 34.14 கோடியில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 0

08 Dec 2022

டீக்கடை அரசியல்: : இலவச சீருடை வழங்காததை கண்டித்து தர்மாபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு பள்ளி அருகில் உள்ள டீக்கடையில் கட்சியினருடன் டீ குடித்த முன்னால் முதல்வர் நாராயணசாமி, தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம் எல் ஏ.,. 0

08 Dec 2022

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், சைக்கிள், மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திரா நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தர்மாபுரி அரசு துவக்கப்பள்ளி எதிரில் முன்னாள் முதல் நாராயணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 0

08 Dec 2022

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் தீப தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள். 0

08 Dec 2022

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், திருவண்ணாமலை அய்யங்குளத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தெப்பத்தில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 0

07 Dec 2022

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். 0
 
Advertisement