Advertisement

நைஜீரியாவில் நவராத்திரி

லேகோஸ், நைஜீரியா: நவராத்திரி வழிபாடு செப்டம்பர் 25ம் தேதி மாலை 6 மணி அளவில் கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் துவங்கியது. 26ம் தேதி நவராத்திரி வைபவங்கள் தொடங்க நகரவாசிகள் மனதில் உற்சாகம் ததும்ப வழிபாட்டை துவங்கினர்.

9 நாளும் லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் கீர்தனைகளை பெண்கள் உள்ளம் உருக பாடி வழிபட்டனர். அக்டோபர் 1ம் தேதி குழந்தைகள் கோவிலில் உள்ள கொலு முன் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

இம்முறை அம்மன் இது வரை லேகோஸ் மக்கள் கண்டிராத வண்ணம் பல புதிய அலங்காரங்களில் பவனி வந்தாள். மனோன்மணி, சிமங்கலி அம்மன், தப காமாட்சி, மீனாட்சி என அழகான அலங்காரங்களில் சிவகுமார் சிவாச்சாரியார் மெருகேற்றி இருந்தார்.

கடந்த 11 வருடமாக நவராத்திரியை சிறப்பாக செய்துவரும் கோயில் குழுமம் இந்த வருட அலங்காரத்துடன் சேர்த்து மொத்தம் 72 அம்பாள் அலங்காரங்கள் செய்திருக்கின்றனர். இதில் ஒவ்வொன்றும் ப்ரத்யேக அலங்காரம், மீண்டும் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது லேகோஸ் செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement