Advertisement

தாய்லாந்தில் 9 இரவுகள் விழா - பத்தாம் நாள் முடிவு விழா

தாய்லாந்தின் தலைநகரான பேங்க் காக் நகரில் சி லோம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஏற்பாடு செய்யும் ஒன்பது இரவுகள் விழாவின் முடிவில் பத்தாம் நாள் விழா இன்று மிகவும் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் குறிப்பாய் தாய்லாந்து நாட்டு மக்களும் சீன மக்களும் மற்றும் இந்தியரும் பிற நாட்டவரும் இணைந்து சீ லோம் என்ற கோயில் இருக்கும் தெருவில் ஐந்து தேர்கள் ஊர்வலம் போக மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இங்கு வாழும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களின் பெயர் கொண்ட பதாகைகளை கொண்ட சிறு சிறு அரங்குகளில் நம் இந்திய கடவுளர்களை பலவிதமாக நிறுவி வழிபாடுகள் செய்தது சிறப்பாக இருந்தது. பல அரங்குகளின் முன்னால் இருந்த தெருவில் பாடல்களைப் பாடியும் நடனங்களை ஆடியும் இந்த விழாவை மக்கள் இரவு முழுவதும் நடத்துவார்களாம். அன்றைய தினம் அந்தத் தெருவும் அதைச் சுற்றியுள்ள ஊர்வலம் போகக்கூடிய தெருவும் அரசாங்கத்தால் அடைக்கப்பட்டு தகுந்த காவல் போடப்பட்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.ஐந்து தேர்களில் பிள்ளையார், முருகன், துர்க்கை, சிவன், பார்வதி போன்ற கடவுளர்கள் தெருவில் தேர்தலில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதிகாலையில் இந்த விழா நிறைவுறுகிறது.இதை மக்கள் கண்ணுற லட்சக்கணக்கில் இதுவரை வந்துள்ளனர். கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் நடக்காத காரணத்தால் இந்த வருடம் வந்த மக்கள் சற்று குறைவாக காணப்பட்டனர். மழை தூறிக் கொண்டிருந்த போதும் விழா இனிதே நடைபெற்றது.- நமது ஹாங்காங் செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement