Advertisement

மேலாண்மை நுழைவுத்தேர்வு


அறிமுகம்:ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் - ஏ.ஐ.எம்.ஏ., எனும் லாபநோக்கமற்ற அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. தேர்வு, தொலைநிலைக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி, மேலாண்மை வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு பணிகளை ஏ.ஐ.எம்.ஏ., மேற்கொண்டு வருகிறது. கடந்த 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், தற்போது 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட் தேர்வு:கடந்த 1988ம் ஆண்டு முதல் நடத்தப்படும் ஒரு தரப்படுத்தப்பட்ட இத்தேர்வை எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை டிப்ளமா மேலாண்மை படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுதுகின்றனர். எந்தவொரு வணிக மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனமும், இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை வழங்கலாம். தற்போது, இந்தியா முழுவதிலும், சுமார் 600 கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்ற எவரும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:நாடு முழுவதிலும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மூன்று வடிவங்களில் ஆண்டுக்கு நான்கு முறை ‘மேட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இணையதளம் வாயிலான தேர்வு - ஐ.பி.டி.,, காகிதம் வாயிலான எழுத்து தேர்வு - பி.பி.டி., கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு - சி.பி.டி., அல்லது மாணவர்களின் விருப்பத்தைப் பொறுத்து, இவை இணைந்த தேர்வாகவும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை:மாணவரது இ-மெயில் முகவரி, டிஜிட்டல் வடிவிலான புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றுடன் ஆன்லைன் வாயிலாக தேர்வுக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:பி.பி.டி., - பிப்ரவரி 14சி.பி.டி., - பிப்ரவரி 21
தேர்வு நாள்:பி.பி.டி., - பிப்ரவரி 19சி.பி.டி., - பிப்ரவரி 26
விபரங்களுக்கு: https://mat.aima.in/

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement