Advertisement

பெண்கள் பள்ளி தாளாளர் போக்சோ வழக்கில் கைது

திருநெல்வேலி: மேலப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோரின் முற்றுகை போராட்டத்தால் தாளாளர் குத்புன் நஜீப் 45, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பிளஸ் 2 மாணவிகள் 3 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது.
அவர்களை தாளாளர் குத்புன் நஜீப் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அவர் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திரளான முஸ்லிம் பெண்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
மாணவிகளும் கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். குழந்தைகள் நல அலுவலரும் விசாரித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து தாளாளரை மேலப்பாளையம் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement