Advertisement

ஆசிரியர் கவுன்சிலிங் அறிவிப்பு

சென்னை: முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாகவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கும் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு, நகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு வழியே நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங், எமிஸ் என்ற கல்வி தகவலியல் மேலாண்மை அமைப்பின் வழியே நடத்தப்படும்.
பதவி உயர்வு பெறுவோரின் பட்டியல், வரும் 11ம் தேதி வெளியிடப்படும். பட்டியலில் இடம் பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, வரும் 12ம் தேதியும்; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, வரும் 13ம் தேதியும் பதவி உயர்வு வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர்களில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக, வரும் 14ம் தேதி பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement