தமிழ் வளர்ச்சி துறை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
செங்கல்பட்டு: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
வரும் 6ம் தேதி காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும்.
ஒரு பள்ளியிலிருந்து, ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!