Advertisement

குரூப் 2 தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்பு!


இந்த தேர்வுக்கு, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 9.95 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்; 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில், 4,012 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. காலை 8:30 மணியில் இருந்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பின், 12:30 மணிக்கு தேர்வு முடிவுற்றதும், விடைத்தாளில் உள்ள விபரங்களை சரிபார்க்க, 15 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. 12:45 மணிக்கு, அனைத்து தேர்வர்களிடமும் விடைத்தாள்கள் பெறப்பட்டன.
தேர்வின் முடிவுகள், ஜூன் இறுதியில் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோரில், ஒரு பதவிக்கு, 10 பேர் வீதம், 5,529 பதவிகளுக்கு, 55 ஆயிரத்து 290 பேர் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பிரதான தேர்வு, செப்டம்பரில் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் பதற்றம்
குரூப் - -2, 2 ஏ தேர்வில், புதிய நடைமுறையால், தேர்வர்கள் கடைசி நேர பதற்றத்துக்கு ஆளாகினர். குரூப் - -2 தேர்வில் அனைத்து அப்ஜெக்டிவ் டைப் வினாக்களுக்கும் விடை அளித்த பின், எத்தனை விடைகள், ஏ, பி, சி, டி, இ என அளிக்கப்பட்டது என்பதை கடைசியாக குறிப்பிட வேண்டும். அதாவது ஏ - பதில்கள் 40, பி - பதில்கள் 60, சி - பதில்கள் 60 என கணக்கிட்டு, கீழே அட்டவணையில் எழுத வேண்டும்.
புதிய நடைமுறைஇந்த எண்ணிக்கை 200 ஆக வர வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால், 2 மதிப்பெண் குறைக்கப்படும். இந்த புதிய நடைமுறையால், கடைசி நேரத்தில், பதில்களை கணக்கிட்டு எழுத முடியாமல், தேர்வு எழுதியவர்கள் தவித்தனர். பலர் சரியாக கணக்கிட முடியாததால், தவறாக எழுதி விட்டதாக புலம்பினர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement