Advertisement

குரூப் 2 தேர்வு மையம் குளறுபடி18 பெண் தேர்வர்கள் அவதி

செஞ்சி: செஞ்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மையத்தின் குளறுபடி காரணமாக 18 பெண் தேர்வர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் 8 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டிய 18 பெண் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் திண்டிவனம் சாலை என்று மட்டும் குறிப்பிட்டு செஞ்சி என குறிப்பிடாமல் விடுபட்டது.
இந்த தேர்வர்கள் திண்டிவனத்தில் உள்ள சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகே செஞ்சி சாணக்யா பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என தெரியவந்தது. அதன் பிறகு அவசரமாக செஞ்சி வந்த போது 9:30 மணி ஆனதால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க, தேர்வு மைய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி தாசில்தார் பழனி, உயர் அதிகாரிகளிடம் பேசி மாணவிகளை தேர்வு எழுத அனுமதி பெற்று தந்தார். இதனால் தேர்வு நேரத்தில் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
தேர்வருக்கு வலிப்பு
செஞ்சி அடுத்த அங்கராயநல்லுார் ஸ்ரீ வித்யா விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய ஒரு வாலிபருக்கு, தேர்வு நேரம் முடிவதற்கு சற்று முன் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், தேர்வு மையத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement