Advertisement

வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு நாளை சென்னை வருகை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News

சென்னை : சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், வெள்ள பாதிப்பை பார்வையிட, மத்திய குழு நாளை சென்னை வர உள்ளது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமருக்கு கடந்த, 6ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மறுநாள் வெள்ள சேதத்தை பார்வையிட, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதங்களைப் பார்வையிட்டார். பிறகு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருக்கு வெள்ள பாதிப்பு குறித்து, படங்களுடன் விளக்கப்பட்டது.

அவரிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்த முதல்வர், சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பும்படி வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆறு பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய குழு சேதங்களை பார்வையிட்டு சென்ற பிறகு, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில், மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    இவிங்க பார்க்கணும்னு தான் வெள்ளத்தை வடியாம புடிச்சி வெச்சிருக்குது தி.மு.க. போனப்புறம் வடிஞ்சிரும் முருகா.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அது சரி மாநில அரசுக்கு கேட்டது கிடைக்குமா??? கிடைத்தது மக்களுக்கு முறையாகக் கொடுக்கப்படுமா...???

  • பைரவர் சம்பத் குமார் -

    1). ஆக எடப்பாடியார் பதவி விலக வேண்டும்.2). இப்பொழுது முதல்வர் பதவி விலகி தனது குடும்பம் அல்லாது ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்துவாரா? மில்லியன் டாலர் கேள்வி??3). என்ன திமுக கலைஞர் அவர்கள் வம்சாவளியை சேர்ந்தவர்கள் சொத்தா?4). திமுக 1958 அல்லது 1959ல் சென்னை மேயராக உறுப்பினரை கொண்ட கட்சி.5). அதற்கு அப்புறம் நமது முதல்வர் ஸ்டாலின் அய்யா 30 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து உள்ளார்.6). கூடவே மேயர் ஃபார் சென்னை முதல்வர்.7). எல்லா திராவிட கட்சிகளும் சேர்ந்து தமிழனை பிச்சை எடுக்க வைத்து உள்ளனர்.8). முதல்வர் 98 சொன்னார் சென்னையில் முடிந்தது வெள்ள நிவாரண நடவடிக்கைகள் என்று ஆனால் நடந்தது பூஜ்யம்.9). முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்

  • சண்முகம் -

    எல்லாம் வடிஞ்சதக்கப்புறம் வாங்கப்பா

  • Arun, chennai -

    சென்னை முழுவதும் வெள்ள நீர் வடிந்துவிடும் அவர்கள் வந்து போனவுடன்.... அனுதாபம், பணம் வேண்டுமல்லவா? யார் செத்தா என்ன? காசு மதம்தான் பிரதானம் மந்திரிகளுக்கு

Advertisement