Advertisement

வெளிமாநில பால் கொள்முதல் ஏன்: அண்ணாமலை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News
சென்னை: 'தமிழக விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, தி.மு.க., அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யாமல், 2.50 லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடகா மாநிலம், 'நந்தினி' நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னை சுற்று வட்டார பகுதிகள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

என்ன விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது என்ற விபரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ், மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்தும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு என்று மக்கள் அவதிப்பட்டதை மறைத்து, ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகம் பாதிக்கப்படவில்லை என்கிறார், அமைச்சர் மனோதங்கராஜ்.

கேள்வி கேட்டால் அவதுாறு பரப்பும் வழக்கம் உள்ள மனோ தங்கராஜ் மீது, ஏற்கனவே அவதுாறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இந்த கேள்விகளுக்காவது அவதுாறு பரப்பாமல் நேரடியான பதிலை சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவரின் மற்றொரு அறிக்கை:

காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாகு என்பவர், ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள, 300 கோடி ரூபாய் பண மூட்டை, வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 'இண்டியா' கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, ஒற்றுமையாக இருப்பர்.

இவ்வாறு கூறியுள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (42)

  • முருகன் -

    அனைத்திலும் குற்றம் கண்டுபிடிக்க இவரால் மட்டுமே முடியும் .இவர் கட்சி ஆட்சியை பற்றி பேசினால் அறிவை பற்றி பாடம் எடுப்பார்

  • Pandi Muni - Johur,மலேஷியா

    ஏன்னா இவனுங்க கிட்ட சாராய பேக்டரிதான் இருக்கு, மாடுங்க கிடையாது காசு பாக்கணும்னு அக்கம் பக்கத்துல....

  • பேசும் தமிழன் -

    இத்தாலி கம்பெனியில் வேலை செய்யும் ஆளிடம்.... ரொக்கம் மட்டும் 300 கோடி கிடைத்துள்ளது என்றால்... அவரிடம் சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் ??? இத்தாலி கம்பெனி முதலாளி பப்பு அவர்களிடம் எத்தனை கோடி இருக்கும் ???

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    இவ்வளவு IT ED ரைடுகள் நடந்துட்டு இருக்கும்போதே கொஞ்சம்கூட அதபத்தியெல்லாம் கவலைப்படாம திருட்டு கும்பல் கிடைக்கிற கேப்புல எல்லாம் எப்புடி விளையாடுறானுங்க பாருங்க நிசமாவே இவிங்க தயிரியத்த பாராட்டணும். மக்கள் துயரத்துலேயே துட்டடிக்கறது மேலும் சிறப்பு

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    ஒரு விளம்பர பைத்தியம்

    • Duruvesan - Dharmapuri,இந்தியா

      நீ ஒட்டகம் மேய்க்க போன எடத்துல உண்மையா இரு

Advertisement