Advertisement

என் மகள் குடும்பம் 36 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது: சபாநாயகர் அப்பாவு

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு:என் மகள், குடும்பத்துடன் சென்னை, பள்ளிக்கரணையில் தான் வசிக்கிறார். மழையின் போது, அவரது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. அவரது குடும்பம், 36 மணி நேரத்திற்கு பின் படகு வாயிலாக மீட்கப்பட்டு வெளியேறியுள்ளனர். தொலைத் தொடர்பும் கிடைக்கவில்லை. என் மகளை போல, 36 மணி நேரம், 48 மணி நேரம் கடந்தும் மீட்கப்பட்டவர்கள் உள்ளனர்.

டவுட் தனபாலு:நிஜமாகவே, தமிழக அரசின் மீட்பு பணிகளை பாராட்டுறாரா அல்லது முதல்வரே எழுந்து நின்று வணக்கம் போடுற உயர்ந்த பதவியில இருக்கிற என் மகளுக்கே இந்த கதின்னு நொந்துக்கிறாரா என்ற, 'டவுட்'தான் வருது!



மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்:தற்போது, ரயில் கட்டண நிர்ணய குழுவை மாற்றி அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. அனைத்து தரப்பு பயணியருக்கும் மலிவு விலையில் சேவை வழங்குவதற்காக, 2019 - --20ல் பயணச் சீட்டுகளுக்கு என ரயில்வே 59,837 கோடி ரூபாயை மானியமாக வழங்கியது. ஒரு நபருக்கான பயண கட்டணத்தில், 53 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் தொடரும்.

டவுட் தனபாலு:என்ன தான் ரயில்வே நஷ்டத்துல ஓடுனாலும், இப்போதைக்கு டிக்கெட் கட்டணத்தை ஏத்த மாட்டீங்க... சீக்கிரமே லோக்சபா தேர்தல் வர்றதால, 'ரிஸ்க்' எடுக்க மாட்டீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. இது, வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்ல; மத்திய பா.ஜ.,வின் சாதனை.

டவுட் தனபாலு:கடந்த காலங்கள்ல, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்களை முறையாக பதிவு பண்ணாம, மூடி மறைச்சாங்க... ஆனா, இப்ப முறைப்படி குற்றங்களை பதிவு பண்றது தான், அதன் எண்ணிக்கை அதிகம் போல தெரிகிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்:ரஷ்யா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்திய மக்களின் தேசிய நலன்களை பாதுகாப்பதில், பிரதமர் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாடுகளை பார்த்து பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியம் அடைந்துள்ளேன். இந்தியா மற்றும் இந்திய மக்களின் தேசிய நலனுக்கு எதிராக மோடியை மிரட்டியோ, அச்சுறுத்தியோ முடிவெடுக்க வற்புறுத்தலாம் என, என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

டவுட் தனபாலு:உலகின் வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவின் அதிபரே, நம் பிரதமர் மோடியை பற்றி இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கார்... ஆனா, நம்ம நாட்டுல இருக்கிற சில அரைவேக்காடுகள் தான், மோடியின் அருமை, பெருமை புரியாம, அரசியலுக்காக அவரை விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி:ரேஷன் கடைகளுக்குள் நீர் புகுந்ததால், வீணான பொருட்களை உடனே அப்புறப்படுத்தி, அதற்கு பதில் புதிய பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடை மற்றும் கிடங்குகளில், உணவுப் பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள், தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு:ரேஷன் கடைகள்ல வீணான பொருட்களை அப்புறப்படுத்தினா, அதற்கு பதிலா புதிய பொருட்கள் சப்ளை செய்யப்படும் என்று அமைச்சர் சொல்லவே இல்லையே... அதனால, ஒப்புக்காக இதை அவர் கூறியிருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:நடிகர் கமலை, நான் அரசியல்வாதியாக கருதவில்லை. லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் நிற்கப் போவதால், புயல் நிவாரண பணிகள் குறித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார். பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுகிறார். அந்த கட்சியில், அவர் ஒருவர் தான் இருக்கிறார். அந்த கருத்துக்கு நாம் செவி சாய்க்க வேண்டியதில்லை.

டவுட் தனபாலு:வாஸ்தவம் தான்... 2015ம் வருஷம் இதேபோன்ற பெருமழை, வெள்ளம் வந்தப்ப, உங்க அ.தி.மு.க., அரசை கடுமையா விமர்சனம் செய்த கமல், இப்ப மட்டும் அடக்கி வாசிப்பது, ஆளுங்கட்சி தரப் போகும் ஒரே ஒரு எம்.பி., சீட்டுக்காகத் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!



Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  அருட்தந்தை கர்த்தரை நாடி செய்யும் தன்னுடையபிரார்த்தனை மூலமாக மீட்கலயா ????

 • V GOPALAN - chennai,இந்தியா

  She is eligible for Rs.6000, 10 kg Rice, One Saree and Dhithi. don't worry

 • V GOPALAN - chennai,இந்தியா

  IT raid should be conducted immediately. They wanted to safe guard their money on uostar. It took 3 days we presume

 • HoneyBee - Chittoir,இந்தியா

  அப்பாவு ஐயா. தண்ணி எங்கே நிக்குதுன்னு பத்து வாட்டி சுடாலின் கேட்டாரு அப்ப நீங்க எங்க பொண்ணு இருக்கிற இடத்துல தண்ணி நிரம்பி வழிகிறது என்று சொல்லி இருக்க வேண்டியது தானே. அப்போ நீங்க எல்லாரும் சொல்றது உருட்டு தானே.. ஏன் இப்படி பொய்யா சொல்லி அலையறீக

 • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

  Kalakad Seeman eellam oru aalu?

Advertisement