Advertisement

கனிம வள கொள்ளையில் தி.மு.க.,வினர்: மத்திய இணையமைச்சர் முருகன் காட்டம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News


அன்னுார்: ''கனிம வள கொள்ளையில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மற்றும் துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய இணையமைச்சர் முருகன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், அன்னுார் அருகே பச்சாபாளையத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

அத்திக்கடவு -- அவிநாசி திட்ட பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அந்த ஆட்சியில் 96 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக தி.மு.க., அரசு தாமதப்படுத்துகிறது. இன்னும் திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது. இந்த திட்டத்திற்காக, மூன்று மாவட்ட மக்கள், 40 ஆண்டுகள் போராடி உள்ளனர்.

காவிரியில் மணல் கொள்ளை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை நடக்கிறது.

இதில், தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர்; அதிகாரிகள் துணை போகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுதும் ஏராளமான கோவில்களில், திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்கு காத்திருக்கின்றன.

நீலகிரி தொகுதியில் மட்டும், மத்திய அரசு சார்பில், ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத்தொகை, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

'ஜல்ஜீவன்' திட்டத்தில் 70 சதவீதம் வீடுகளுக்கு, மத்திய அரசு நிதியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள், நுாறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும். இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    இவிங்க எல்லாருமே ஒரே டிசைன் தான். ஆதாரம் இல்லாம அடிச்சு உடுவாங்க. ஆட்சியை புடிக்கறதிலே குறியாயிருப்பாங்க.

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    ஒரு அமைச்சரா இருந்தும் நடவடிக்கை ஒன்னும் எடுக்காம, சும்மா அறிக்கை விட்டுட்டு இருக்காரு? இவரை தலைவர் பதவிலேந்து தூக்கினது சரிதான்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    இன்னும் விளக்கமாக விரிவாக பேச வேண்டும் முருகன் அவர்களே. நீங்கள் 1.5 லட்சம் விவசாயிகள் பயன் என்று சொல்கிறீர்கள் . இதுவே திராவிட கட்சிகள் 1.5 கோடி என்று சொல்லி இருக்கும். ஆகவே திராவிட பொய் கட்சிகளை வீழ்த்த அதிகம் உழைப்பு தேவை..

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஆட்சியை புடிச்சதின் நோக்கம் நிறைவேற அவங்க தன வேலைகளை செய்கிறார்கள் அதில் நீங்க குறைகாண்கிறீர்கள் அது தவறு.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஆமா, இவரு புதுசா கண்டுபிடிச்சுட்டாரு. திமுக குண்டர்கள்தான் இதை செய்கிறார்கள் என்று ஆறு மாதக் குழந்தை கூடச் சொல்லிவிடும்.

Advertisement