Advertisement

எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகுங்கள்!

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News

உலக,தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்ஆர்.ரகோத்தமன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த மாதம் நடந்தஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது; தெலுங்கானாவில் மட்டும் காங்கிரசும், மிசோரமில் மாநில கட்சியும் வென்றுள்ளது.

'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதற்கேற்ப, வரும் லோக்சபா தேர்தலுக்கு, இது ஒரு முன்னோட்டமாக விளங்குகிறது. காங்கிரசுக்கு இந்த தோல்விகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ள, 'இண்டியா' கூட்டணி, லோக்சபா தேர்தலை ஒற்றுமையாக சந்திக்கும் சூழலில் இல்லை.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதிலேயே, கூட்டணி பிளவை சந்திக்கும். பிரதமர் வேட்பாளர் உறுதியானாலும், மக்கள் மத்தியில் கூட்டணி வெற்றி பெறுமா என்பதும் சந்தேகம்.

அதே நேரம், தற்போது கிடைத்துள்ள வெற்றி சாதாரணமானதல்ல. பா.ஜ.,வின் இந்த வெற்றி...

 பிரதமர் மோடியின் ஆளுமைக்கு

 சனாதனத்துக்கு ஆதரவாக, ஆன்மிகத்துக்கு

 பா.ஜ.,வினரின் கடும் உழைப்புக்கு

 பயங்கரவாத மிரட்டல்களை, அச்சறுத்தல்களை உறுதியுடன் சமாளித்த மத்திய அரசுக்கு

 உலகெங்கும் பொருளாதாரம் தள்ளாடும் நேரத்திலும், நம் நாட்டை பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப்பெரிய நாடாக மாற்றி காட்டிய பெருமைக்கு கிடைத்த வெற்றி தான் இது.

 எல்லாவற்றையும் விட, ஒன்பதரை ஆண்டு மத்திய பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நேர்மையான நிர்வாகத்திற்கு, இந்த வெற்றி தான் மூல காரணம்.

இப்படி, நிறைய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வரும், 2024 லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணி வெல்லும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

எனவே, ஆளாளுக்கு பிரதமராக வேண்டும் என்று பகல் கனவில் மூழ்கியிருக்கும், 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், இனியாவது துயில் கலைய வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சிகளாக செயல்பட, தற்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகளில் இந்தியாவில் பத்திரியாளர்கள் மற்றும் நிருபர்களைக் கூட்டி பிரதமர் ஒரு பிரஸ் மீட்டைக் கூட நடத்தவில்லையே ...??? ஏன் ..ஏன் ,,ஏன் ...???

 • P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா

  இந்த தடவையும் பாஜக வை வெற்றிபெறவைக்காவிட்டால். இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது. இந்தியா ஆண்டவன் விட்ட வழிதான். எல்லோரும் உணர்வார்கள் ஊழலற்ற ஆட்சி வேணும் என்றால். வரட்டும். கொள்ளையடிக்கும் கூட்டம் வர வேண்டும் என்றால் வரட்டும் எது நடக்கும் என்று இருக்கிறதோ அது நடை பெறும். நல்லவர்களுக்கும் கொடியவர்களுக்கும் நடக்கும் யுத்தம் ஆகும்.

 • venugopal s -

  நீங்கள் இப்படியே சொல்லிக் கொண்டு இருங்கள், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பிறகு தானே தெரியும்!

  • தமிழரசன்,விழுப்புரம் -

   ஏலே திமுக மொரட்டு முட்டு வேணு ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பும் இதையேதான் சொன்ன அங்க பூரா உன்னோட புள்ளிக் கூட்டணி உள்ள காங்கிரஸ் மண்ணை கவ்வியது தெரியாதா உனக்கு?

  • duruvasar - indraprastham

   ஐயா இந்த அறிவுரை 5 மாநில தேர்தல் முடிவுக்கு முன்னாள் தாங்கள் போட்ட எந்த பதிவிலும் வெளிப்படவில்லையே

 • rama adhavan - chennai,இந்தியா

  நாட்டை கொள்ளை அடிக்க கூட்டம் தயார். ஆனால் பங்கு பிரிக்கும் போது (ஆட்சி அமைக்கையில் ) பிரிவினை/சண்டை கட்டாயம் வரும்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  எதுவும் நிரந்தரம் அல்ல ....

Advertisement