Advertisement

எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை:தமிழக அரசு, 2024 ஜன., 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. இதற்காக பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தொழில்துறை அமைச்சர் ராஜா மற்றும் உயரதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதுகுறித்து தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் 2015ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 நிறுவனங்கள் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

கடந்த 2019 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 305 நிறுவனங்கள், 3.04 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தன.

இரு மாநாடுகளிலும் ஒப்பந்தம் செய்ததில் 50 சதவீத முதலீடுகள் கூட வரவில்லை.

இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் அதிக சந்தை வாய்ப்பு உள்ள துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இதுவரை பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சில் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளன. எனவே இந்த மாநாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக முதலீடுகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement