Advertisement

கலெக்டரை ஒருமையில் பேசிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருமழிசை சமுதாய நலக்கூடத்தில் 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, மாலை 4:30 மணிக்கு துவக்கி வைப்பதாக இருந்தது.

ஆனால் பாதிக்கப்பட்ட வேறு பகுதிகளை ஆய்வு செய்து அங்கு வர இரவு 7:00 மணியாகி உள்ளது. அவருடன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உடனிருந்தார்.

நிவாரணம் வழங்க தாமதம் ஏற்பட்டதால் ஆவேசமடைந்த தொகுதி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, கலெக்டர் என்று கூட பார்க்காமல் மக்கள் மத்தியில் அவரை ஒருமையில் திட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதை கண்டித்து திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன்தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆகியவை இணைந்து, எம்.எல்.ஏ., மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே போல் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    கட்சி தலைமை முதல் கீழ்மட்ட (மட்டமான?) தொண்டன் (வாழ்நாள் கொத்தடிமை) வரை மரியாதை என்றால் என்ன என்றே தெரியாது. இது போன்ற விஷச்செடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.

Advertisement