Advertisement

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சேத்துமடை கோவிலில் இருந்து புனிதநீர்

Tamil News
பொள்ளாச்சி:உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து புனிதநீரை, பொள்ளாச்சி வி.எச்.பி., அமைப்பினர் அனுப்பி வைக்கின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து, உ.பி., மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து, புனித நீர் எடுத்து வந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.

இதுகுறித்து, வி.எச்.பி.,யினர் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் நடக்கிறது.

நாடு முழுக்க புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து, அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி, பொள்ளாச்சி அருகே சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து புனிதநீர் எடுத்து சென்று, மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது.

அஞ்சல் துறை வாயிலாகவோ அல்லது நேரிலோ இந்த புனித நீர், அயோத்திக்கு அனுப்பப்படும்.

கும்பாபிஷேக விழாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாள் என ஒதுக்கப்பட்டு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram pollachi -

    எல்லோரும் தீர்த்தம் எடுத்துச் செல்லும் தெய்வகுள காளியம்மன் கோவில் திருப்பணி பாதியிலே நிற்கிறது . நேற்று சத்திரம் வீதி சீதா ராமர் கோவிலில் அயோத்தி செல்லும் புனித நீருக்கு பூஜை நடந்ததாக சொன்னார்களே!

Advertisement