Advertisement

தனுஷ்கோடியில் ரூ.1 கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு பாலம்

Tamil News
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வெளிநாட்டு பறவைகளை காண வசதியாக ரூ.1 கோடியில் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு டெலஸ்கோப் வசதியுடன் பாலம் அமைக்க உள்ளனர்.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர் சீசனை அனுபவிக்க தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வடக்கில் 8 கி.மீ.,ல் பரவிக் கிடக்கும் நீர்பிடிப்பு பகுதியில் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பிளமிங்கோ பறவைகள் குவிகின்றன.

இவை அதிக தொலைவில் நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்காக தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் நீர்ப்பிடிப்பு பகுதியில் 100 மீ.,ல் பாலம் அமைத்து அதன் முனையில் உப்புக் காற்றில் துருப்பிடிக்காதபடி கட்டடம், அதனுள் டெலஸ்கோப் அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர்.

ஜனவரியில் கட்டுமானப் பணி முடிந்ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement