Advertisement

பெண் தொழிலாளரை கொண்டு இயங்கும் வேதா பார்க் மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்குமா?

Tamil News


''ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தில், 'வேதா பார்க்' அமைக்கும் பணிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்'' என்று, திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய அரசின், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், 'வேதா பார்க்' அமைக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா) முயற்சி மேற்கொண்டது. மத்திய, மாநில அரசுகளின், 63 சதவீத மானியத்துடன், பூங்கா அமைக்க, 120 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்தது.

10 ஆயிரம் பேருக்கு வேலை



கடந்த 2021ல் நாடு முழுவதும் ஏழு ஜவுளி பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் மூலம், 36 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துவக்கினால், 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

'டீமா' வாயிலாக, வேதாரண்யத்தில், வாடகை கட்டடத்தில் முதல்கட்டமாக, ஐந்து நிறுவனங்களை துவக்கினர்.

'மெகா ஜவுளி பூங்கா' திட்டம் வந்த பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ள நிலையில், 'வேதா பார்க்' திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, 'டீமா' சார்பில் மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: பின்னலாடை தொழில் வெளிமாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது; மாறாக, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில், உற்பத்தி பிரிவை மட்டும் துவக்கலாம். அதன்படி, 'வேதா பார்க்' திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இயங்கி வரும், ஐந்து நிறுவனங்களில், 300 பெண் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மாதம், 70 லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளமாக வழங்கி வருகிறோம்.

தொழிலாளர்பற்றாக்குறை நீங்கும்



மத்திய அரசு, சிறிய தொழிற்பூங்கா திட்டத்தில், 'வேதா பார்க்' திட்டம் நிறைவேற, நிர்வாக அனுமதி வழங்க வேண்டும். இதனால், 36 நிறுவனங்களின் உற்பத்தி பிரிவு துவங்க முடியும். நிறுவனங்கள் இயங்கினால், திருப்பூரின் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

வேலை வாய்ப்பில், பின்தங்கிய மாவட்டங்களில், கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவர். தற்போது, 300 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும், 75 லட்சம் ரூபாய் அளவுக்கு, சம்பளம் வழங்குகிறோம். இதனால், பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டம் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது.

தமிழக அரசு தரப்பில், முழுமையான அனுமதி கிடைத்துவிட்டது; மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கினால், 'வேதா பார்க்' திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். பின்தங்கியுள்ள வேதாரண்யம் பகுதி, சிறப்பு ஜவுளி உற்பத்தி மையமாக உயரும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

வேதாரண்யத்தில் தற்போது செயல்படும் பின்னலாடை நிறுவனங்களில், 300 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும், 75 லட்சம் ரூபாய் அளவுக்கு, சம்பளம் வழங்குகிறோம். இதனால், பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டம் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Mohan - Salem,இந்தியா

    தமிழக அரசுக்கு எல்லா வகையிலும் பின்பாட்டு பாடும் ஊடகங்களை தவிர்த்து விட்டு வாருங்கள் ஐயா மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தகுதியுள்ள திட்டங்களை கண்டிப்பாக முன்னெடுப்பார் என தெரிகிறது. வங்கி அதிகாரிகள் மூலம் இவை நடக்கும் என்பது உறுதி.

Advertisement