Advertisement

கடன் திரும்ப செலுத்தும் காலம் நீட்டிக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை:'மிக்ஜாம்' புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடனுதவி வழங்க வேண்டும்.

காப்பீட்டு தொகையையும் விரைந்து வழங்க வேண்டும்.

நான்கு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இந்த மாவட்டங்களில், 24 தொழிற்பேட்டைகளில் உள்ள 4,800 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன.

மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சேதமடைந்து விட்டன. தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை துவக்க சிறிது காலம் தேவைப்படும்.

எனவே, இந்த நிறுவனங்களுக்கு வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மாற்றியமைத்திட வேண்டும்.

மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். மேலும், காப்பீட்டு தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement