Advertisement

லோக் அதாலத்தில் ரூ.334 கோடிக்கு தீர்வு

சென்னை:தமிழகம் முழுதும் நேற்று நடந்த, 'லோக் அதாலத்'தில், 47,314 வழக்குகளில், 334.49 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய லோக் அதாலத், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. மாவட்ட, தாலுகா அளவில், 480 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், 47,314 வழக்குகளில், 334.49 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நக்கீரன், கோவிந்தராஜன் திலகவதி, சி.குமரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மலை சுப்ரமணியன், ஏ.ராமமூர்த்தி, கோகுல்தாஸ், ஜெயபால் ஆகியோர் தலைமையில், ஏழு அமர்வும், மதுரை கிளையில், நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கலைமதி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வும் ஏற்படுத்தப்பட்டது.

புயல், மழையால் வெள்ளப் பெருக்கு, தண்ணீர் தேக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தும், லோக் அதாலத்தில் வழக்கறிஞர்கள், அதிகாரிகள், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விபத்து இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில், 65 வழக்குகளில் 5.88 கோடி ரூபாய்க்கும், மதுரை கிளையில் 30 வழக்குகளில், 4.41 கோடி ரூபாய்க்கும் தீர்வு காணப்பட்டது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement