Advertisement

58,222 கிலோ பால் பவுடர் வினியோகம்

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 58, 222 கிலோ பால் பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, உணவு வழங்கும் பணிக்கு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும், நேற்று முன்தினம் வரை, 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அருகில் உள்ள மாவட்டங்களில், நான்கு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழியே பெறப்பட்டு, முறையாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 58, 222 கிலோ பால் பவுடர்; 9.67 லட்சம் குடிநீர் பாட்டில்கள்; 2.65 லட்சம் பிரட் பாக்கெட்டுகள்; 10.38 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

மழைநீர் வடிந்த பகுதிகளில், 25,000 துாய்மை பணியாளர்களுடன், போர்க்கால அடிப்படையில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement