Advertisement

வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு நாளை வருகை

சென்னை:சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், வெள்ள பாதிப்பை பார்வையிட, மத்திய குழு நாளை சென்னை வர உள்ளது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமருக்கு கடந்த, 6ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மறுநாள் வெள்ள சேதத்தை பார்வையிட, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார்.

ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதங்களைப் பார்வையிட்டார். பிறகு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருக்கு வெள்ள பாதிப்பு குறித்து, படங்களுடன் விளக்கப்பட்டது.

அவரிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்த முதல்வர், சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பும்படி வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆறு பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய குழு சேதங்களை பார்வையிட்டு சென்ற பிறகு, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில், மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement