Advertisement

மத்திய அரசு உதவ தயார்: அமைச்சர் உறுதி

Tamil News
சென்னை:''மழை விட்டு நான்கு நாட்களாகியும், தண்ணீர் வடியாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, தமிழக அரசு அதற்கான தீர்வு காண வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு, தேசிய பேரிடர் படை, விமான படை, ராணுவ வீரர்களை உடனே அனுப்பியது.

நிவாரண தொகையாக, 1,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மழை விட்டு நான்கு நாட்களாகியும், தண்ணீர் வடியாமல் இருப்பதற்கான காரணத்தை, தமிழக அரசு கண்டறிய வேண்டும்.

அதற்கான தீர்வுகளை காண வேண்டும். என்ன பிரச்னையாக இருந்தாலும், அதற்கு தேவையான உதவி செய்வதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

தமிழக பா.ஜ., நிர்வாகிகள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement