Advertisement

சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெள்ள பாதிப்பால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்.

வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் போன்றவற்றை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தவும், பொதுமக்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட வருவாய் தாலுகாக்களில், குறு வட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நாளை துவங்கும். சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில், வரும் 12ம் தேதி துவங்கும்.

சிறப்பு முகாம்கள் நடக்கும் இடம், நேரம் குறித்த அறிவிப்பை, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பர்.

சிறப்பு முகாம்களில், பொதுமக்கள் வசதிக்கென, இ - சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement