Advertisement

வி.ஏ.ஓ., சங்கத்தினருடன் 13ம் தேதி பேச்சு

சென்னை:அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் இடையிலான பேச்சு, 13ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக, செப்., 27ம் தேதி, வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, டிச., 5 மாலை 3:00 மணிக்கு, மறு பேச்சு நடப்பதாக இருந்தது. ஆனால், தொடர் மழை காரண மாக, இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது வரும், 13ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, இக்கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement