Advertisement

நகைகள் ஏலம் விடத் தடை

சென்னை:கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், நகைக்கடன் வழங்குகின்றன. அடகு வைத்த தேதியில் இருந்து, ஓராண்டிற்குள் அசல், வட்டி செலுத்தி, கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஓராண்டிற்கு மேலாகியும் வட்டி, அசல் செலுத்தவில்லை எனில், நகைகள் ஏலம் விடப்படும்.

இந்நிலையில், வெள்ள பெருக்கால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் நகைக்கடன் வாங்கி, ஓராண்டிற்கு மேலாகியும் அசல், வட்டி செலுத்தாமல் இருந்தால் கூட, நகைகளை ஏலம் விடக்கூடாது என்று, கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement