Advertisement

இதே நாளில் அன்று

Tamil News
டிசம்பர் 10, 1943


மயிலாடுதுறையில், புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞரும், இயக்குனருமான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனாக, 1943ல் இதே நாளில் பிறந்தவர், மாணிக்க விநாயகம்.
தன் மாமாவும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனிடம் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை கற்றார். இவர், 15,000த்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்களுக்கு இசையமைத்து, முன்னணி பாடகர்களை பாட வைத்தார். 'ஸ்டார் லிங்க்ஸ்' என்ற இசைக்குழுவையும் நிர்வகித்தார். விக்ரம் நடிப்பில் வெளியான, தில் படத்தில், வித்யாசாகர் இசையில், 'கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா ஒருத்தி...' என்ற பாடலை பாடி, பின்னணி பாடகராக, தன், 50வது வயதில் அறிமுகமானார்.
தொடர்ந்து, தவசி, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், துாள், நியூ, வெயில், பருத்தி வீரன், சிங்கம் உள்ளிட்ட படங்களில், ஹிட் பாடல்களை பாடினார்.
பேரழகன், கள்வனின் காதலி, திமிரு உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 'கலைமாமணி, இசை செல்வம்' உள்ளிட்ட
விருதுகளை பெற்ற இவர், 2021, டிசம்பர் 26ல், தன், 78வது வயதில் மறைந்தார்.'விடைகொடு எங்கள் நாடே..,' என்ற பாடலால், புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வலியை பதிவு செய்த, 'மாணிக்கம்' பிறந்த தினம் இன்று!
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement