Advertisement

ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்குமா?

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், 2 கிலோ சர்க்கரை, 50 ரூபாய்; கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

தற்போது, 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீர் வீடுகளில் புகுந்தது. ஐந்து நாட்களாகியும், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் என, பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ரேஷன் கடைகளில், அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்குமாறு, தமிழக அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement