Advertisement

மழை நீர் கட்டமைப்பை சீரமைக்க தமிழக அரசு தவறி விட்டது: தமிழிசை

புதுச்சேரி:''சென்னையில் பெருமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கையுடன், மழை நீர் கட்டமைப்பை சீரமைத்திருக்க வேண்டும்,'' என, கவர்னர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறியதாவது:

சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மழை மீது பழி போடக்கூடாது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள், நேரிடையாக சென்று பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.

இதில், 'தொண்டு நிறுவனங்களை அழைக்கிறோம்' என, அரசு சொல்வது சரி கிடையாது. போர்க்கால அடிப்படையில், மக்களுக்கு தேவையான உதவி வழங்கப்பட வேண்டும்.

மழை நீர் தேங்கியுள்ளதால், நோய்கள் வர வாய்ப்புள்ளது. சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கையுடன், மழைநீர் கட்டமைப்பை சீரமைத்திருக்க வேண்டும்.

கட்டமைப்பை சீர் செய்யும் போதே, மழை வந்து விட்டது என்று சொல்ல முடியாது.

பாதிப்புகளுக்கு முன்னரே சரி செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் பல முறை ஆட்சி செய்திருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது என்ன செய்தார்.

சிங்கார சென்னையாகவும், சிங்கப்பூராகவும் மாற்றுவோம் என்று சொன்னவர்களால், நீர் வடியும் ஊராக கூட மாற்ற முடியவில்லை. புயல் காலகட்டத்தில், என் வீட்டிற்கே, மூன்று நாட்களாக பால் பாக்கெட் வரவில்லை.

சில இடங்களில் இன்னமும் மின்சாரம் வரவில்லை. கடந்த, 2015 மழை வெள்ளத்தையும், தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பட்டிமன்றம் நடத்தி, விவாதிப்பதை விட்டு, பொதுமக்கள் பாதுகாப்பிற்கு வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement