Advertisement

அ.தி.மு.க., பொதுச்செயலருக்கு கமல் கட்சி எச்சரிக்கை

சென்னை:'கமலை பச்சோந்தி' என, விமர்சித்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் தலைநகர் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர், நம் கட்சி தலைவரை விமர்சித்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.

வாழ்வு அளித்தவருக்கே துரோகம் செய்த பழனிசாமியை, பச்சோந்தி என்று விமர்சித்தால், பச்சோந்திக்கு தான் அவமானம். உயிர்ச்சூழலில் பச்சோந்திக்கும் முக்கிய பங்கு உண்டு. பழனிசாமிக்கு அந்த முக்கியத்துவமும் கிடையாது.

பா.ஜ., அரசின் அடிவருடியாக செயல்பட்டு, மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்ததுடன், சிறுபான்மையினரை பாதிக்கும் சட்டங்களுக்கு கையெழுத்திட்டு விட்டு, இப்போது திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டதாக நாடகமாடுகிறார்.

இவர், தன் கொள்கையில் மாறாமல் இருக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவரை விமர்சிப்பதை, இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விட மாட்டோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement