Advertisement

அரசிடம் குவிகிறது நிவாரண நிதி

Tamil News
சென்னை:முதல்வர் வேண்டுகோளை ஏற்று, 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும், அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.

டி.வி.எஸ்., குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, டி.வி.எஸ்., குழும இயக்குனர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஷேணு அகர்வால், 3 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் வழங்கினார்.

பி.எஸ்.ஜி., குழுமத்தின், 'லீப் கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜிவ் கார்த்திகேயன், முதன்மை செயல் அலுவலர் தேவ்ஆனந்த் ஆகியோர், 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஒரு மாத சம்பளத்தை சேர்த்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் அக்கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வழங்கினார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement