Advertisement

மத்திய அரசு வழங்கிய ரூ.4,397 கோடி என்னாச்சு?

Tamil News
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பா.ஜ., மற்றும் உணவு வங்கி அமைப்பு இணைந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று, நிவாரண பொருட்கள் வழங்கின. இதில், ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அண்ணாமலை பேசியதாவது:
சென்னையில் வரலாறு காணாத பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். வெள்ளத்தால், 30 ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்த மொத்த சொத்தையும் மக்கள் இழந்துள்ளனர். சென்னைவாசிகள் மிகவும் அமைதியானவர்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும், சிரிப்புடன் கடந்து செல்வர். ஆனால், இம்முறை வீதிக்கு வந்து போராடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

சென்னையில் அடுத்த வெள்ளம் வரக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி, 561 கோடி ரூபாய் ஒதுக்கியதுடன், 450 கோடி ரூபாய் என்.டி.ஆர்.எப்., நிதியும் வழங்கியுள்ளார். இந்த நேரத்தில், எந்த அரசையும் குறை சொல்ல விரும்பவில்லை. கஷ்டத்தில் இருந்து மக்கள் வெளியே வந்த பின், மாநில அரசிற்கு நிறைய கேள்விகள் வைத்துள்ளோம்.

சென்னைக்கு மழை வெள்ளம் வந்தால், வெளியேற்ற வசதியாக, வடிகாலுக்கு மட்டும், 2015ல் இருந்து மத்திய அரசு சார்பில், 4,397 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு உள்ளது. அது என்னவானது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

  மேற்கு மாம்பலத்தில்தான் நீங்க வழங்குவீங்க...? ஏழை கூலித் தொழிலாளிகள் மட்டுமே வசிக்கும் கொருக்குப்பேட்டையோ, ஆர்.கே.நகரிலோ, புளியந்தோப்பிலோ அல்லது வடசென்னை உள்ள பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்தும் ஏழை கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஏரியாவில் கொடுப்பீங்களா...? கொடுக்க மாட்டீங்க...? ஏன்னா, அவங்க பஞ்சப் பராரிங்க.. அதுனால... அது சரி... அண்ணாமலை சார்.... இன்றைக்கு தினமலர் படிச்சீங்களா....? ///₹5 லட்சத்துக்காக நண்பரின் மகனை தூக்கிய பாஜக பிரமுகர்-//// இதுக்கு என்ன பதில்...? பிரியாணி கடைல புகுந்து அண்டாவை தூக்கிட்டு போவானுங்க பேசுனவங்களே... ஐந்து லட்சத்துககு நண்பரின் மகனை கடத்திய உத்தமபுத்திரர் உள்ள கட்சி உங்களுதானே....?

 • angbu ganesh - chennai,இந்தியா

  பெருங்காய டப்பா மாதிரி வசன மட்டுமேதான் இருக்கும் பொருள் இருக்காது

 • angbu ganesh - chennai,இந்தியா

  kaalam padhil solllum

 • Sampath Kumar - chennai,இந்தியா

  பகுதி ஓன்று கௌஸ்தலை பேசின் மொத்த நீளம் ஏழ்நூற் கிலோமீட்டர் பனி முடிந்தது அய்யனூறு கிலோமீட்டர் பட்ஜெட் மூவாயிரத்து இரனொரு கோடி செலவிட்டது இரண்டாயிரம் கோடி பனி நிறைவு அறுபது எட்டு சதா விகிதம் பக்தி இரண்டு கோவளம் பேசின் மொத நீளம் மோனுற்றி அறுபது கிலோமீட்டர் பனி முடிந்தது நூறு இருப்பது கிலோமீட்டர் பட்ஜெட் ஆறித்து ஏலநூறு கோடி செலவிட்டது மூறு கோடி பனி நிறைவு முப்பதினைந்து சதா விகிதம் பகுதி மூறு எஸ் எம் தி ப மொத நீளம் அறுவது கிலோமீட்டர் பனி முடிந்தது அய்யம்பது கிலோமீட்டர் பட்ஜெட் இரநூற் கோடி செலவிட்டது நூற்று என்பது கோடி பனி நிறைவு என்பது சதா விகிதம் மொத பட்ஜெட் ஐயாயிரம் கோடி செலவிட்டது இரண்டாயிரத்து முன்னூறு கோடி பிணிகள் முடிந்த பகுதியில் வெள்ளம் வடிந்து விட்டது பனி முடியாத பகுதியில் தண்ணீர் தங்கி உள்ளது இந்த திட்டங்கள் நிறைவு பெறுவது இரண்டியரது இறுதி

 • Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா

  2015ல் கொடுத்ததை இப்போது கேட்டால், யார் பதில் சொல்ல வேண்டும்? பங்காளிகளைத் தானே கேட்கவேண்டும். பணம் கொடுத்தால் , எப்படி செலவாகிறது என்று பார்த்திருக்கவேண்டும். எட்டு வருசம் உறங்கிவிட்டு [ஆட்சியும் மாறிய பின்] கேட்பதன் ரகசியம் என்னவோ

Advertisement