Advertisement

15,000 ரூபாய் தர வேண்டும் :பன்னீர் செல்வம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனடியாக நிவாரண நிதியாக, குடும்பத்துக்கு, 15,000 ரூபாய் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை, அரசு சார்பில் வழங்க வேண்டும்.

மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை, அரசு வழங்க வேண்டும். எண்ணுார் பகுதியில் தண்ணீரில் ரசாயன கழிவு நீர் கலந்ததால், மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக, அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

நாங்கள் எங்களின் ஒரு மாத சம்பளத்தை, நிவாரண நிதிக்கு வழங்குவோம். சென்னையில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. நிவாரண உதவி மக்களை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலை.

தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பன்னீர்செல்வம்,

முன்னாள் முதல்வர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    இந்த பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தால் தான் இப்போது சொன்னபடி செய்திருப்பாரா என்பதே கேள்வி

Advertisement