Advertisement

முதல்வர் சொன்ன பொய்யை கேட்டு ஏனோ தானோ என இருந்த மக்கள்!

சென்னை:'முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர். பொய்க்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், முதல்வருக்கும், அமைச்சர் சுப்பிரமணியனுக்கும் கொடுக்கலாம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர் நேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 'சென்னையில் கனமழை பெய்தாலும், ஒரு சொட்டு நீர் கூட தேங்காமல் பார்த்து கொள்வோம்' என, தி.மு.க.,வினர் மார்தட்டி பேசினர்.

ஏற்கனவே ஒரு முறை சென்னையில் மழை பெய்தது. அப்போதே, சென்னை முழுதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அதை பாடமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகரில், 2,400 கி.மீ., துாரத்திற்கு, மழை நீர் வடிகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு, 1,240 கி.மீ., நீளத்துக்கு பணி நிறைவேற்றப்பட்டது. இது ஐந்தாண்டு கால திட்டம்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வரும், அமைச்சர்களும், 'வடிநீர் கால்வாய் பணிகள், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டன' என்றனர். இப்போது, 51 சதவீத பணி நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். எல்லாவற்றிலும் பொய் பேசுகின்றனர்; பொய் பேசிதான் ஆட்சிக்கு வந்தனர். இவர்கள் பேச்சை கேட்டு, மக்கள் ஏனோ தானோ என இருந்து விட்டனர்.

இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டி என, முதல்வர் கூறுகிறார்; எதிலென்றால் ஊழல் செய்வதில். சென்னையில், 5,000 கோடி ரூபாய் திட்டத்தில், எவ்வளவு பணி நிறைவேற்றப்பட்டது; எவ்வளவு பாக்கி உள்ளது என்று மக்கள் கேட்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,500 ஏக்கர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 400 ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், 7,000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement