Advertisement

மனித உரிமை மீறல் நடக்காமல் தடுப்போம்!

சென்னை:'மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடக்காமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக, ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

ஆண்டுதோறும் டிச., 10ம் தேதி, உலக நாடுகளால், 'உலக மனித உரிமை நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின், 75ம் ஆண்டாகும். 'அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி' என்பதே, இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993ம் ஆண்டு செப்., 28ல் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழகத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், 1997 ஏப்., 17ல், 'மாநில மனித உரிமைகள் ஆணையம்' ஏற்படுத்தப்பட்டது.

அன்று முதல் கடந்த செப்டம்பர் வரை பெறப்பட்டுள்ள, 2.61 லட்சம் முறையீடுகளில், 2.18 லட்சம் முறையீடுகளுக்கு தீர்வு கண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில், எவர் எதனால் பாதிக்கப்படுகின்றனரோ, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, அவரை விடுவித்து காப்பாற்றும் இதயம் உடையது இந்த அரசு.

இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடக்காமல் முற்றிலும் தடுப்போம்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement