Advertisement

கவர்னர் மாளிகையில் என்.ஐ.ஏ., விசாரணை:கருக்கா வினோத்திடம்விசாரிக்க மனு தாக்கல்

சென்னை, நந்தனம் எம்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்; இந்தாண்டு அக்., 25ம் தேதி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன், பெட்ரோல் குண்டு வீசினார். இதில், கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இவர், மற்றொரு வழக்கில் சிறையில் இருந்த போது, பி.எப்.ஐ., என்ற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினருடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த அமைப்பினர் உதவியோடு தான், அவர் ஜாமினில் வெளியே வந்து, கவர்னர் மாளிகை முன், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து கவர்னர் ரவி, மத்திய உள்துறைக்கு விரிவான அறிக்கை அனுப்பியதை தொடர்ந்து, என்.ஐ.ஏ., விசாரணைக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டது.

இதன்பின், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள், சில நாட்களுக்கு முன், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கருக்கா வினோத் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதை தொடர்ந்து நேற்று, தடயவியல் நிபுணர்களுடன் சென்று, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கவர்னர் மாளிகை வாசல் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்துவதற்காக, அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுக்க, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement