Advertisement

வீடுகளுக்கான பினாயில் விற்கும் டான்சி நிறுவனம்

சென்னை:தமிழக சிறு தொழில் நிறுவனமான டான்சி, வீடு, அலுவலக பயன்பாட்டிற்கான அறைகலன்கள்; பள்ளி, கல்லுாரி வகுப்பறை சாதனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

இதுதவிர,'ஸ்பிரிட்'டை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தின்னர் உள்ளிட்டவற்றை தயாரித்து, மத்திய அரசின் இணையதளம் வாயிலாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது.

அடுத்ததாக, பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்த கூடிய, கிருமிநாசினி கரைசலான பினாயில் விற்பனையில், டான்சி நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

ஒரு லிட்டர் கருப்பு மற்றும் வெள்ளை பினாயில் விலை தலா, 70 ரூபாய். இது, கிண்டி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள டான்சி கூடங்களில் கிடைக்கும்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement