Advertisement

தாட்கோ திட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.40 கோடியில் புது திட்டம் அறிவிப்பு

சென்னை:தாட்கோ வழியே செயல்படுத்தப்படும், நான்கு திட்டங்களை ஒருங்கிணைத்து, 'முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்' என்ற புதிய திட்டத்தை, 40 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தாட்கோ வழியே செயல்படுத்தப்படும், வாழ்வாதார திட்டங்களான, பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட நான்கு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இவை, 'முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்' என்ற பெயரில், புதிய திட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை, 40 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இப்புதிய திட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்கான தனி நபர் திட்டத்தில், முன்விடுப்பு மானிய தொகை, 30ல் இருந்து, 35 சதவீதமாக உயர்வு அல்லது அதிகபட்சமாக, 3.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றில் எது குறைவோ, அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு திட்ட மதிப்பில், 50 சதவீதம் அல்லது, 3.75 லட்சம் ஆகியவற்றில் எது குறைவோ, அத்தொகையை மானியமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement