Advertisement

ஆதார் புதுப்பிக்க கட்டணம்

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொதுமக்கள் தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆதாரில், முகவரி மாற்றம், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, பொதுமக்கள் ஆதார் மையங்களை நாடுகின்றனர்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் ஆவணங்களில் திருத்தம் செய்யும் சேவைகளை, ஆதார் மையம் அல்லது ஆன்லைன் முறையிலும் செய்து கொள்ள முடியும்.

ஆதார் மையங்களுக்கு சென்றால், கட்டணம் உண்டு. ஆன்லைன் முறையில், இச்சேவையை இலவசமாக பெற முடிந்தது. ஆனால், இச்சேவைக்கு இனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

இ - சேவை மையம் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்ட போது, '10ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், புதிய ஆவணங்கள் இணைப்பு அவசியம்.

வரும், 14ம் தேதி முதல் ஆவணங்கள் புதுப்பிக்கும் சேவைக்கும் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை' என்றனர்.

-நமது நிருபர்-
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement