Advertisement

தினமும் ஒரு சாஸ்தா -24 ( தமிழக ஐயப்பன் கோவில்கள்)

Tamil News
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.

வளம் தரும் சாஸ்தா



சாஸ்தா, சாத்தன் என்ற சொல்லுக்கு ஆசிரியன், போதிப்பவன் என்று பொருள். பழங்காலத்தில் இருந்து சாஸ்தா வழிபாடு உள்ளது. இவரை தமிழகத்தில் அய்யனார் என்றும், கேரளத்தில் ஐயப்பன் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் ஆறு, குளம், ஏரி, கால்வாய் போன்ற கரையோரங்களில் இவருக்கு கோயில் அதிகம். பொதிகை தாமிரபரணியின் துணையாறுகளில் ஒன்று மருதுார் கால்வாய்.இதன் அருகேயுள்ளது நத்தமுடையார் சாஸ்தா.

துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் அருகே தோழப்பன் பண்ணையில் உள்ளது இக்கோயில். கருவறையில் பூர்ண புஷ்கலையுடன் காட்சி தருகிறார். இவரை வணங்குபவர்கள் விவசாயிகளின் தலைவர் என போற்றுகின்றனர். நத்தமுடையாரை வணங்க நித்தம் மழை பெய்யும் என்னும் பொன்மொழி இப்பகுதியில் பிரபலம். கருப்பசாமி, மாடசாமிக்கு சன்னதியுள்ளன.
ஆழ்வார்கற்குளத்தில் இருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - 10:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 95859 58738, 99425 82842
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement