Advertisement

துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News
அங்காரா: துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்க பாதிப்பையடுத்து மூன்று மாதம் அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

துருக்கியில் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று முறைதொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று (பிப்-7) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 4 ஆயிரத்திற்கும் மேலாக உயிர்ப்பலிஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவி வழங்கி வருகின்றன.

இந்நிலையில் துருக்கி அதிபர் ரீசப் தைப்பி எர்டோகன், இன்று அளித்த பேட்டியில், நிலநடுக்க மீட்பு பணிகளை விரைபடுத்தவும், நாடு முழுவதும் மூன்று மாதம் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • ranjani - san diego,யூ.எஸ்.ஏ

    ஏர்டோகன் இந்தியாவை விரும்பத்தகாதவர் பட்டியலில் வைத்துள்ளார். பல இடங்களில் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். "இன்னாரை ஒருத்தல் அவர்நாண நண்ணயம் செய்து விடல்" என்ற குறளுக்கு ஏற்ப இந்தியா உதவி செய்கிறது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இந்த மூர்க்கன் கொஞ்ச நாளைக்கு இந்தியா பக்கம் திரும்பி ஊளையிடமாட்டான்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அங்கிருக்கும் சிரியா அகதிகள் பிரதேசம் தான் அதிகம் குலுங்கியுள்ளது , அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நண்பர் ஸ்டேட்டஸ் போட்டு உள்ளார் , எது நிஜம்?

Advertisement