அதானி விவகாரம்: 2வது நாளாக முடங்கியது பார்லி : பிப்.,6க்கு ஒத்திவைப்பு
இந்த செய்தியை கேட்க
பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்து உள்ளது.
'அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதானி நிறுவன மோசடி குறித்து விவாதிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோரினர். இது தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த 'நோட்டீஸ்'கள் அனைத்தும் ஏற்கப்படவில்லை என்பதை அறிந்ததும், காங்., தலைமையில் தி.மு.க., திரிணமுல், இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் என 13 எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள், கடும் அமளியில் இறங்கினர். இதனால், நேற்று பார்லிமென்டின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டாவது நாளாக லோக்சபாவும், ராஜ்யசபாவும் கூடின. அப்போதும் அதானி விவகாரத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால், கூட்டத்தொடர் பிப்.,6ம் தேதி காலை 11 மணி வரை ஓத்திவைக்கப்பட்டது.
வாசகர் கருத்து (13)
அட பொருளாதார மேதையே, அதானி ஷேர் வாங்கி வைத்து இருப்பவர்கள்தான் இடை பற்றி கவலை கொள்ளவேண்டும். எதிரி கட்சிகள் எதற்காக கூவுகின்றன? ஒஹ்ஹஹ் இப்படி கூவ சொல்லி பெட்டி வந்து இருக்கிறதா? உன்னாழும் தன ஏன்டா பயனும் இல்லை, அம்பானி அதானி பல்லாயிரக்கனன்ன வேலை வாய்ப்பை கொடுக்கிறார்கள். வெள்ளைகாரண் என்ன சொன்னாலும் அதை நம்புங்கள். உங்க கொத்தடிமை மூளை அவ்வளவுதான்.
Short-seller அவருக்கு சொந்தம் இல்லாத share யை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று பணம் தேடுவது. விலையை எப்படி குறைக்க? (அதானி காங்கிரஸ் காலம் முதல் தொழில் அதிபர்.) நல்ல வியாபாரம் நடக்கும் ஜவுளி கடையை நஷ்ட படுத்த வேண்டும். வதந்தி பரப்புதல். வியாபாரம் முடங்கும். முதல் குறையும். வதந்தி பரப்பியவர் எடைக்கு கொடுத்தால் விற்று பணமாக்கி தருவேன் என்பார். (Hindenburg ஒரு short - seller. ? ) அதானி தொழில் நிறுவனங்கள் அனைத்தும் 24×7 தேவை படுபவை. 60000 மேல் ஊழியர்கள். போட்ட முதலை எடுக்க முடியும். எந்த தொழில் நிறுவனத்திலும் 100 சதவீத நேர்மை இருக்காது?
அதானி விவகாரத்தினால் இந்திய நாட்டிற்கு என்ன தீமை???உங்களது Share மதிப்பு இழந்தது அவ்வளவு தானே???அது உங்கள் பிரச்சினை, நாட்டின் பிரச்சினை அல்லவே அல்ல
ஒட்டுமோத்தமா அதனை பேரையும் இனிமேல் உள்ளயே விடாதீர்கள். இதுதான் நல்ல நேரம். மக்களுக்கு பயன்பெறும் திட்டத்தை நடைமுறைப் படுத்துங்கள்... இவர்கள் எப்போதும் வேலைக்கு ஆகமாட்டார்கள்....
அதானி போன்றவர்களால் சாமானியனுக்கு ஒன்றும் பயனில்லை, இவரைபோன்றவர்களைப்பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதால் நாட்டுக்கு ஒன்று பயனில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றுள்ள உறுப்பினர்கள் நேரம் மற்றும் பணவிரயம் செய்வது நாட்டுமக்களுக்கே நஷ்டம் இவர்களுக்கோ அரசுக்கோ அல்ல, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முறையாக நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் முறையிட்டு ஆகவேண்டிய வேலைகளை அரசும், மாமன்ற உறுப்ப்பினர்களும் கவனிப்பது தான் முறையாகும், ஜைஹிந்த்
அம்பானி ,அதானி மற்றும் பல மிகப் பெரும் கோடீஸ்வரர்களால் நமது நாட்டுக்கு எப்பவுமே மிகவும் ஆபத்துதான் ,தங்களது பேராசையினால் நாட்டில் இருக்கும் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டு விட்டு அவர்கள் கம்பி நீட்டி விடுவார்கள். எதையும் உருப்பட விடமாட்டார்கள் .நமது நாட்டின் பொருளாதாரத்தை அரசியல்வாதிகளின் துணையோடு சீர்குலைத்து விடுவார்கள் .சாமானிய மக்களுக்கு இவர்களைப் போன்ற பண முதலாளிகளால் ஒன்றும் பயன் இல்லை ...