நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
அபுதாபி: நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே கிளம்பி 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கினார்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை, இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

வாசகர் கருத்து (6)
சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயணிகள் உயிரை கைப்பற்றிய விமானிகளுக்கு மனமார்ந்த நன்றி.
டாட்டா ஏர் இந்தியாவை வாங்கி ஒரு வருசமாச்சு...
எந்த அரசாங்கத்தாலும் எந்த தொழிலையும் உருப்படியாகச் செய்ய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் ஏர் இந்தியா .... அதன் ஊழியர்களை கூண்டோடு மாற்றுங்கள் ....
🙏🙏🙏
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பராமரிப்பு என்ன என்பதை அந்த விமானத்தில் உள்ளே நுழைத்தவுடனே பார்க்க முடியும்.