Advertisement

வடலுார் தைப்பூச திருவிழா 600 போலீசார் பாதுகாப்பு எஸ்.பி., சக்தி கணேசன் தகவல்

Tamil News
வடலூர்:வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில் 5ம் தேதி நடைபெற உள்ள தைப்பூச ஜோதி தரிசன பெரு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார்.

வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், 5ம் தேதி ஜோதி தரிசன பெருவிழா விழா நடைபெறுகிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவுக்கான ஏற்பாடுகள் வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில் செய்கின்றனர்.

கடலுார் மாவட்ட எஸ்.பி., சக்தி கணேசன் ஜோதி தரிசனம் நடைபெறும் சத்ய ஞான சபையை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின் அவர் கூறியதாவது:

தைப்பூச ஜோதி தரிசன விழாவில் 600க்கும் மேற்பட்ட போலீசார், ஊர் காவல் படையை சேர்ந்த 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விழாவையொட்டி, 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். 60 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நெய்வேலி டி.எஸ்.பி., ராஜேந்திரன், வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் உடன் இருந்தனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement