Advertisement

இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், அதன் பிறகு இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஏ. ஆர். முருகதாஸிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் தலைவா என பதிலளித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 2024 ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது .

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement