Advertisement

ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பஹத் பாசில். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகமாக வித்தியாசமாக இருக்கும். மலையாளம் தாண்டி தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். அதேப்போல் தெலுங்கு சினிமாவில் புஷ்பா படத்திலும் மிரட்டினார். தொடர்ந்து இவருக்கு பன்மொழிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்போது ரஜினியின் 170வது படத்திலும் இவர் இணைந்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் துவங்குகிறது. இதற்காக ரஜினி இன்று(அக்., 3) அங்கு விமானம் மூலம் சென்றார். தொடர்ந்து நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் இன்று ராணாவை தொடர்ந்து பஹத் பாசிலும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.

இந்த படம் சமூகத்திற்கு நல்லதொரு கருத்தை கூறும் படமாக, பிரமாண்டமாய் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement