Advertisement

இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல்

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு மட்டும் இன்று(ஜூன் 2) பிறந்தநாள் அல்ல. இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குனர் மணிரத்னத்திற்கும் இன்று தான் பிறந்தநாள். அவருக்கும் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛ஒருவர் தன்னைச் சுற்றி உருவாக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வாழ்க்கையை எண்ணினால் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களால் வயதைக் கணக்கிட்டால், நீங்கள் இன்று மிகவும் வயதான மனிதராகப் போகிறீர்கள் என் அன்பான மணிரத்னம் அவர்களே...

தனது கலையின் மூலம் மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்ட இந்திய சினிமாவின் ஒரு நாயகன். உரையாடல்களை அழகாகக் காட்சி அனுபவமாக மாற்றியவர். தொடர்ந்து கற்றுக் கொண்டு சவாலின் அளவைக் கவனிக்காமல், சினிமாவில் எல்லைகள் தொட்டுவிட்டீர்கள். அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரு மாஸ்டர் நீங்கள்… நாயகன் முதல் KH23 வரையிலான பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில், மதிப்பாகவும், வளமாகவும் இருந்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement